வடமதுரை:வடமதுரை அருகே பி.கம்பிளியம்பட்டியில், ஸ்ரீ பட்டவன், பாப்பாத்தி, தொட்டிச்சிம்மன், மாயம்பெருமாள் சுவாமி கும்பிடு விழா நடந்தது. கணக்கப்பிள்ளை குளத்தில் கரகம் ஜோடித்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர். * தென்னம்பட்டி கே.குரும்பபட்டி மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவிலும், இதே பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு, சாட்டையடி பெறும் நேர்த்திக்கடன் வழிபாடு நடத்தினர்செலுத்தினர் * எரியோடு உருதமாலையம்மன் கோயிலில், நடந்த ஆடி உற்சவ விழாவில், ஆவுடையம்மன் ஊற்றி கரகம் பாலித்து, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.