மதுரை மாவட்டம், பேச்சியம்மன் படித்துறைக்கு அருகில் அமைந்துள்ளது, ராகவேந்திரர் மந்திராலயம். மகான் ராகவேந்திரர் வந்து தங்கி, பூஜைகள் செய்த தலம் என்பது சிறப்பு. வியாழக் கிழமைகளில் நடைபெறும் பூஜை இங்கு விசேஷம். இங்கே நாரினால் தொடுக்கப்பட்ட பூமாலைகளை மட்டுமே பூஜைக்கு பயன்படுத்துகின்றனர். கற்கண்டு சாதமும், அட்சதை பிரசாதமும் இங்கு வெகு பிரசித்தம். இந்த மந்திராலயத்துக்கு வந்து மகானைத் தரிசிக்க கல்வியில் சிறக்கலாம்.