மதுரையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். ஒருமுறை பைரவர் கயிலாயம் சென்று திரும்பும்போது, அவரது வாகனம் தொலைந்துபோனது. அவர் சிவனாரிடம் முறையிட்டார். திருவாதவூர் வந்து தம்மை வழிபட, தொலைந்த வாகனம் திரும்பக் கிடைக்கும் என அருளினார் ஈசன். அதன்படியே திருவாதவூருக்கு வந்து தீர்த்தம் உருவாக்கி நீராடி, சிவவழிபாடு செய்த பைரவருக்கு வாகனம் திரும்பக் கிடைத்தது. வாகனத்தைத் தொலைத்தவர்கள், திருவாதவூர் சென்று, பைரவ தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட, தொலைந்த வாகனம் விரைவில் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!