கோவை, இடையர்பாளையம் பூம்புகார் நகரில் உள்ளது கற்பக விநாயகர் ஆலயம். இங்கே காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, காலபைரவர், விஷ்ணு துர்கை, பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். திருமணத்தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற விரும்புவோர், தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து, 11 தேங்காய்களை மாலையாகக் கோத்து கற்பக விநாயகருக்கு சாற்றி வழிபட, விரைவில் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.