கோவை - பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது அஷ்டஸித்தி வரத ஆஞ்சநேயர் ஆலயம். சக்தி மிக்க இந்த ஆஞ்சநேயரின் திருவடியில், நமது கோரிக்கைகளை சமர்ப்பிக்க, 48 நாட்களுக்குள் அவை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி பிரார்த்தனை பலித்ததும், தயிர்சாதம் நிவேதனம் செய்து, ஏழை எளியோர்க்கு பிரசாதமாக தருகிறார்கள். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, விசேஷ அலங்காரத்தில் அருளும் இந்த அஞ்சனை மைந்தனை வழிபட, நம் சங்கடங்கள் யாவும் பனிபோல் விலகும்!