Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பரமேஷ்டி
பரமேஷ்டி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஆக
2013
01:08

சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் டில்லியில் பரமேஷ்டி என்ற ஒரு தையற்காரர் வாழ்ந்து வந்தார். அவர் ஜகந்நாதரின் நாமசிங்கீர்த்தனத்தில் எல்லையில்லா ஆனந்தம் அடைந்து வந்தார். டில்லி பாதுஷா சிம்மாசனத்தில் அமரும்போது கால்களை வைக்க இரண்டு உயர்ந்த வகைத் திண்டுகள் தைக்கத் தேர்ந்த தையல்காரரான பரமேஷ்டி அழைக்கப்பட்டார். தையல்காரரே, இந்த உயர்ந்த வகைத் துணியைக் கொண்டு இரண்டு அழகான கால் திண்டுகள் தைக்க வேண்டும். அப்படியே செய்கிறேன். பாதுஷாவின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் பாக்கியம்.

ஓரிரு நாட்களில் பரமேஷ்டி, மிக அழகான இரண்டு திண்டுகளைத் தயாரித்து விட்டார். ஆனால்...., ஆஹா இவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு கொண்ட திண்டுகளை இறைவனுக்கல்லவா சமர்ப்பிக்க வேண்டும்! ரத யாத்திரையில் வரும் ஜகந்நதருக்குச் சமர்ப்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!பரமேஷ்டி ரதயாத்திரை பற்றி நினைத்தவுடன் மற்ற அனைத்தையும் மறந்தார். புரி ரதயாத்திரை காட்சி பரமேஷ்டியின் கண் முன் விரிந்தது. ஆஹா, எவ்வளவு அற்புதமாக உள்ளாய். ஜகந்நாதா... ஆ! உன் காலுக்கடியில் விரிப்பு கிழிகிறதே. ஜகந்நாதா! என்னிடம் புதிய கால் திண்டுகள் உள்ளன. இதோ ஏற்றுக் கொள். ஆச்சரியம், பரமேஷ்டியின் பக்திக்காக அவரிடமிருந்து ஜகந்நாதரே திண்டை ஏற்றுக் கொண்டார். ஜகந்நாதா, உன் கருணையே என்னவென்பேன்! இந்த ஏழை அளித்ததைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டாயே!சட்டென்று அந்த அற்புதக் காட்சி மறைந்தது. பரமேஷ்டி கண் விழித்தார்.

என்ன, நடந்ததெல்லாம் கனவா? நஜம்போல்தானே இருந்தது! ஜகந்நாதரின் தரிசனம், அவர் என்னிடமிருந்து திண்டைப் பெற்றுக் கொண்டது, எல்லாம் எப்படிக் கனவாக இருக்க முடியும்? இது என்ன? இரண்டு திண்டுகளில் ஒன்றுதானே உள்ளது? அப்படியென்றால் எல்லாமே உண்மைதான். அப்போது பாதுஷாவின் காவலர்கள் வந்து பரமேஷ்டியை அழைத்தனர். அவர் ஒரு திண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். மிக அழகாகத் திண்டைக் கைத்திருக்கிறாய்! ஆனால் எனக்கு இரண்டல்லவா வேண்டும். மன்னியுங்கள் பிரபு, திண்டு மிக நன்றாக இருந்ததால் மற்றொன்றை பூரி ஜகந்நாதரே ஏற்றுக் கொண்டுவிட்டார். ஏன் உளறுகிறாய்? பாதுஷா, மீண்டும் மீண்டும் கேட்டபோதும் அதே பதிலையே சொன்னார் பரமேஷ்டி. நான் டில்லிக்கே ராஜா, என் பொருளை இன்னொருவர் எப்படி எடுத்துச் செல்ல முடியும்?ஆம் பாதுஷா, ஜகந்நாதர்தான் மற்றொன்றைப் பெற்றுக் கொண்டார்.

மீண்டும் மீண்டும் பொய் பேசுகிறாயே! காவலாளி, இவனைச் சிறையில் அடை. நள்ளிரவு, பூரி ஜகந்நாதர் சிறையில் தோன்றி, காவலர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு உள்ளே வந்தார். பரமேஷ்டி, பரமேஷ்டி.... இவ்வளவு இனிமையான குரலில் என்னை அழைப்பது யார்? ஆ, எம்பெருமான் ஜகந்நாதனா? பரமேஷ்டி! அஞ்சாதே. நான் இருக்கும்போது என் பக்தர்கள் எவரும் அஞ்சத் தேவையில்லை. அன்றிரவு பாதுஷா உறங்கும்போது அவர் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைவதை உணர்ந்தார். திடுக்கிட்டுப் படுக்கையில் அமர்ந்திருக்கும் பாதுஷா. ஆ, என் அரண்மனையில் கட்டுக்காவலர்களை மீறி வந்து என்னை அடிக்க யாருக்குத் துணிவு வந்தது? என்றாலும் இந்த அடியில் ஏதோ ஓர் இதம் இருக்கிறதே! பாதுஷா தன் மந்திரிகளுடன் நிதானமாகக் கலந்தாலோசித்தார். நம் அரண்மனை காவல்களை மீறி இங்கு யாரும் வர முடியாது பாதுஷா. நேற்று தண்டனை பெற்ற அந்தத் தையல்காரன் ஏதாவது செய்திருப்பானோ? எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. வாருங்கள், சிறைக்குச் சென்று பார்க்கலாம்.

அப்போது சிறைக்கதவுகள் திறந்து கிடந்தன. பரமேஷ்டியின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு அவர் கண்களை மூடி நாம சங்கீர்த்தனம் செய்தபடி தன்னை மறந்து இருந்தார். பரமேஷ்டியின் பக்தியைப் பார்த்த பாதுஷா, அவர் பேசியது சத்தியமே என்பதை நம்பினார். தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டது என்பதையும் உணர்ந்தவராக... பரமேஷ்டி என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் பக்தியைப் புரிந்து கொள்ளாமல் தண்டித்து விட்டேன். பாதுஷா பரமேஷ்டிக்கு ஆடை அணிகள் அணிவித்து அவரை யானை மீது அமர வைத்து நகர்வலம் வந்து கவுரவித்தார்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar