வால்பாறை:வால்பாறையில் 58 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய, இந்துமுன்னணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.வால்பாறை தாலுகா இந்துமுன்னணி நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது.கூட்டத்திற்கு பா.ஜ.,மண்டலத் தலைவர் தங்கவேல், இந்துமுன்னணி ஒன்றியத்தலைவர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் சபரீஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில், வால்பாறையில் அடுத்த மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 58 சிலைகள் பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் படும். அடுத்த மாதம் 9ம் தேதி கோவில் களில் பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளை, 15ம் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாலை நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ஒன்றியச்செயலாளர் குமார், நகரத்தலைவர் அஜித்குமார், செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 58 சிலைகள் பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படும். அடுத்த மாதம் 15ம் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும்.