புதுச்சேரி:கவுண்டன்பாளையம், தேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது.செடல் திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. 8ம் தேதி ஊரணி பொங்கல் வழிபாடும், 9ம் தேதி காலை 5:00 மணிக்கு பால்குட அபிஷேகம், 7:00 மணிக்கு சக்தி கரக வீதியுலா, 12:00 மணிக்கு சாகை வார்தல் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏரளானமான பக்தர்கள் செடல் போட்டு அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடுகளை கவுண்டன்பாளையம் பொதுமக்கள் செய்திருந்தனர்.