நெட்டப்பாக்கம்:நல்லாத்தூர் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 16ம் தேதி நடக்கிறது.கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. 15ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சாமி வீதியுலா நடக்கிறது. செடல் உற்சவம் 16ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை நல்லாத்தூர் கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.