பதிவு செய்த நாள்
14
ஆக
2013
10:08
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, தேவாலயத்தில் வர்ணம் பூசி, அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தின், ஆண்டுத் திருவிழா, வரும், 29ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, செப்., 8ம் தேதி, மாதாவின் பிறந்த நாள் விழா மற்றும் கூட்டுப் பாடல் திருப்பலியுடன் நிறைவடையும். திருவிழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவிற்காக, தேவாலயம் சார்பில், தேவாலயத்தின் மேல், கீழ் கோவில்கள் மற்றும் சுற்றுப்புற வளாகங்களில், வர்ணம் பூசப்பட்டு, அழகுபடுத்தப்படுகிறது. வர்ணம் பூசும் பணி முடிந்தவுடன், கோவில்களை, மின்விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெறும்.