பதிவு செய்த நாள்
17
ஆக
2013
10:08
திருப்போரூர்:கொண்டங்கி பழண்டியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.திருப்போரூர் அடுத்த கொண்டங்கியில் உள்ள, பழண்டியம்மன் கோவில், 300 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கொண்டாடப்படுகிது. இந்தாண்டு இவ்விழா, 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து, கூழ்வார்த்தல் நடந்தது. கடந்த, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு, பால்குட வைபவம். மதியம் 12:00 மணிக்கு, ஆட்டோ, டிராக்டர் மற்றும் ரதம் இழுத்தல் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு தீச்சட்டி ஊர்வலம். அதன் பின்னர், 57 பக்தர்கள் பிரார்த்தனையாக விரதமிருந்து தீ மிதித்தனர்.இரவு 9:00 மணிக்கு, பறந்து வந்து மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுவதும் பிடாரி அம்மனுடன், பழண்டியம்மன் மலர் அலங்காரத்தில் வீதிஉலா வரும் வைபவம் நடந்தது. பக்தர்கள் சீர்வரிசையுடன் அம்மனை வழிபட்டனர். இதையடுத்து அம்மனுக்கு ஆக 16, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.நாவலூர்: நாவலூர் பழண்டியம்மன் கோவிலில், ஆடிதிருவிழாவை ஒட்டி கூழ்வார்த்தல், பால்குட வைபவம், அம்மன் அருள்பாலிப்புடன் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் நெய் தீபத்துடன், எலுமிச்சம்பழம் மற்றும் மலர் மாலைகள் சார்த்தி வழிபட்டனர்.