புதுச்சேரி:முதலியார்பேட்டை ஊத்துக்காட்டம்மன் கோவில் 70வது ஆண்டு செடல் திருவிழா ஆக 16 நடந்தது.முதலியார்பேட்டை பழைய மார்க்கெட் வீதியில் உள்ள ஊத்துக்காட்டம்மன் கோவில் 70வது ஆண்டு செடல் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. 9ம் தேதி ஊரணி பொங்கல், அதனை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆக 16 பகல் 12:00 மணிக்கு காவடி பூஜை, 2:00மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் செடல் போட்டுக்கொண்டும், உடலில் அலகு குத்தி வாகனங்கள் இழுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு தேரோட்டம் நடந்தது.