மதுரை: மதுரை மணிநகர் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில், "ராதா மதுராபதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. கிளைத் தலைவர் சங்கதாரி தாஸ், உற்சவத்தை தொடங்கி வைத்தார். ஆக.,21 வரை நடக்கும் இவ்விழாவில், மாலை 6.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். முன்னதாக, சிறப்பு பூஜைகள் உண்டு. "ஜூலன் யாத்ரா எனப்படும் இவ்விழாவில், ஊஞ்சலை ஆட்டிவிடுவதால், அருள் கிடைக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர்.