பதிவு செய்த நாள்
20
ஆக
2013
10:08
ஸ்ரீபெரும்புதூர்: மேட்டுபாளையம், ராகாலம்மன் கோவிலில், தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுபாளையம் கிராமத்தில், ராகாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிமாத தீமிதி திருவிழா, கடந்த 16ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, 108 பால் குடம் அபிஷேகமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. 17ம் தேதி, பொங்கலிட்டு, அம்மனுக்கு கும்பம் போடப்பட்டது.18ம் தேதி, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், காப்பு கட்டி விரதம் இருந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். வாண வேடிக்கைகளுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராகாலம்மன், திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.