திருப்போரூர்: காட்டூர் செங்கழனி அம்மன் கோவிலில், தீமிதி விழா நாளை (22ம் தேதி) நடைபெறுகிறது. திருப்போரூர் அடுத்த வெண்பேடு ஊராட்சி காட்டூரில், செங்கழனி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், தீமிதி திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, நாளை 22ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. விழாவையொட்டி, 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:30 அளவில் தீமிதி விழா நடைபெறுகிறது. அதன் பின், 9:00 மணி அளவில் அம்மன் வீதியுலா வாணவேடிக்கை இன்னிசை வாத்தியங்களுடன் நடைபெறும். தொடர்ந்து, வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தெருக்கூத்து, நாடகம் நடைபெறுகிறது.