பதிவு செய்த நாள்
21
ஆக
2013
11:08
கடலூர்: கடலூர் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி, நடக்கிறது. இதனை முன்னிட்டு, வரும் 22ம் தேதி, மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 23ம் தேதி, காலை 8:00 மணிக்கு ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், முதல் கால சதுஸ்தான பூஜை நடக்கிறது. 24ம் தேதி, காலை 8:00 மணிக்கு மூன்றாம் கால சதுஸ்தான பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், அதிவாச ஹோமங்கள், 81 கலச திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம், பூர்ணாகுதி, சாற்றுமுறை நடக்கிறது. வரும் 25ம் தேதி, காலை 6:00 மணிக்கு விஸ்வரூப சேவை, கோ பூஜை, 5ம் கால வேள்விகள், ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.