பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
விக்கிரமசிங்கபுரம்:பாபநாசம் அகஸ்தியர் கோயில் கல்யாண தீர்த்தத்தில் ஆன்மீக சேவை செய்தவருக்கு பாராட்டு விழா நடந்தது. அகஸ்தியர் கோயில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு அம்பை சுவாமி ராமகிரஷ்ணா ஆனந்த குடில் சுவாமி ராமகிருஷ்ணா ஆனந்தா தலைமை வகித்தார். தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை தலைவர் சங்கரபாண்டியன், செயலாளர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். கல்யாண தீர்த்தத்தில் சுமார் 35 ஆன்டுகாலமாக ஆன்மீக சேவை செய்து வரும் முப்பிடாதி பிள்ளைகு“கு ஜீவகாருண்யா பேரொளி என்ற பட்டத்தை வழங்கி தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் நட்ராஜ் பேசினார். அவர் பேசியதாவது: சேவை செய்பவர்களை பாராட்டுவது நமது கடமை. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதிக்கரையில் ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆன்மீகவாதிகளும் இருப்பது போற்றுதலுக்குரியது. நதிகளை அசுத்தப்படுத்தக் கூடாது என்று சொன்னாலும் நாட்டில் சாயப்பட்டறை, தொழிற்சாலைகள் மற்றும் சாக்கடைகழிவு நீரால் நதிகள் மாசுபடுகின்றன.
நம் மக்கள் சிந்திப்பது ஒன்று ஆனால் செய்வது ஒன்றாகிறது. இந்த அகஸ்தியர் மலை பகுதிக்கு சுற்றலா செல்ல சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இங்கு வரும் கிளை விதிகளை மீறுவதால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும். கங்கை - காவேரி திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் நதிகளை இணைக்க வேண்டும் என்ற முதல்வரின் (ஜெயலலிதாவின்) திட்டம் சிறப்பானது. இதை செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். இங்குள்ள தாமிரபரணி நதி இலங்கை வரை சென்றது என்று சரித்திரம் சொல்கிறது. ரத்தம் கெட்டு விட்டால் அது உடம்புக்கு ஆபத்து என்பது போல நீர் நிலைகள் கெட்டுவிட்டால் அது மனித வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும். நதிகள் மாசுபடுவதால் தங்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று நதிகள் அழுகிறது. நதிகளை நாம் சுத்தமாக்கி வருங்கால சந்ததியினருக்கு உதவவேண்டும். சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம், மேன்மையான செயல்பாடு இருக்க வேண்டும். ஆனால் இது இப்போது இல்லை. ஆன்மீக ரீதியான செயல்பாடு எல்லோரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து பௌர்ணமி மற்றும் அன்னதானக் குழுவினரை பாராட்டி பலர் பேசினர். விழாவில் ஜீவ காருண்ய பேரொளி பட்டம் பெற்ற முப்பிடாதி பிள்ளை ஏற்புரை வழங்கினார். விழாவில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவி மனோன்மண, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால்மாரியப்பன், சிவசேனா மாவட்ட தலைவர் கோபால், வள்ளி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வேம்பு, அகஸ்தியர் கோவில் கார்த்திகை கமிட்டி சுப்பையா, பொதிகை தர்ம சாலை செயலாளர் பிரபு, சுவாசம் அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ், பொதிகை தபோவனம் முரளி நெல்லையா, உட்பட பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை பி.ஆர்.ஓ. ரமேஷ்முத்துராமன் நன்றி கூறினார்.