கோவில்பட்டி: கோவில்பட்டியில் உலக நன்மை வேண்டியும், மக்கள் உடல் ஆரோக்கியத்திற்காகவும் வரும் 25ந்தேதி மஹாரிய நமஸ்ஹாரம் நடக்கிறது. கோவில்பட்டி ஸ்ரீஸத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி சார்பில் குரு ராகவேந்திர ஸ்வாமியின் 35வது ஆண்டு ஆராதனை விழா வரும் 25ந்தேதி நடக்கிறது. இதையொட்டி உலக ஷேமத்திற்காகவும், மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் அதிகாலையில் செண்பகவல்லியம்மன் கோயில் எதிரேயுள்ள காயத்ரி திருமண மண்டபத்தில் பூஜ்யஸ்ரீ செல்லானந்த சுப்ரமணிய ஸ்வாமி அரங்கில் மஹாரிய நமஸ்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து விஷேச பூஜையும், ஸ்ரீரங்கம் ப்ரம்ம ஸ்ரீராமச்சந்திர பாகவதர் மற்றும் கோவில்பட்டி பஜனாம்ருத மண்டலியினரின் தலைமையில் சிறப்பு பஜனையும் நடக்கிறது. மேலும் சிறப்பு அபிஷேகம், சுமங்கலி பூஜை, ஆராதனை நடக்கிறது. இதையடுத்து கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பின்புறமுள்ள காந்தி மைதானத்தையடுத்த மீரா திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து மாலையில் ஸ்ரீசத்யசாயி சேவா சமிதி குழுவினரின் பஜனையும், இரவில் புஷ்பாஞ்சலியுடன், 1008 வடைமாலை சாத்தி ஸ்ரீஆஞ்சநேயர் உற்வசமும் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீஸத்குரு ராகவேந்திர சுவாமி ஆராதனை கமிட்டி தலைவர் நடராஜய்யர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.