பதிவு செய்த நாள்
28
ஆக
2013
12:08
திருமண தடைகளைப் போக்கும் மணமாலை அணியும் வழிபாடு, ஆகஸ்ட்11ல் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி (சின்னம்பேடு) பாலசுப்பிர மணிய சுவாமி கோயிலில் நடக்க உள்ளது. அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவின் நான்காம் ஆண்டு விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உற்ஸவம் காலை 9 மணிக்கு அபிஷேகத்துடன் துவங்கும். இதையடுத்து வள்ளி மணவாளப் பெருமாளுக்கு திருமணம் நடக்கும். பின்பு சுவாமி பவனி கோயிலுக்குள்ளேயே நடக்கும். திருமணமாகாத ஆண், பெண்கள், மாலை கொண்டு வந்து சுவாமிக்கு அணிவித்து, அதையே பிரசாதமாகப் பெற்று, அணிந்து சுவாமியின் பின் வலம் வர வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. அன்னதானமும் உண்டு.
இருப்பிடம்: சென்னை - கோல்கட்டா நெடுஞ் சாலையில் 35 கி.மீ., தூரத்தில் சின்னம்பேடு.
போன்: 99406 25308,97909 57592, 044-2471 2173.