ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் நடக்கும். ரங்கமன்னாரும், ஆண்டாளும் பவனி வருவர். ஆண்டாள் கண்ணன் மீது பாடிய வாரணமாயிரம் பாடலை கன்னிப்பெண்கள் படித்தால் விரைவில் திருமணபாக்கியம் உண்டாகும். மணமான பெண்கள் படிக்க மழலைச்செல்வம் கிடைக்கும். அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தை ஒட்டி முளைக் கொட்டு விழா நடத்தப்படும். ஆடிப்பூரத்தன்று பார்வதிதேவி ருதுவானதாக கருதப்படுவதால், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்பாளுக்கு ருது வைபவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.