கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்தனர். கிருஷ்ணனை அலங்கரித்து யானை மற்றும் குதிரை பரிவாரங்களுடன் ஊர்வலம் வந்து, கோவில் முன்புற மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். சேவை, சாற்றுமுறை வைபவங்கள் நடத்தியபின், பக்தர்கள் பெருமாள் கோவில் தெரு, கடைவீதி, கவரைத்தெரு, மந்தைவெளி ஆகிய பகுதிகளில் உறியடித்தனர்.