பதிவு செய்த நாள்
30
ஆக
2013
10:08
கீழக்கரை : கீழக்கரை அருகே கொம்பூதியில், கிருஷ்ண ஜெயந்தி 30வது ஆண்டு விழாவின், இரண்டாம் நாளான நேற்று காலை, மஞ்சள் நீராட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. வழுக்குமரம் ஏறும் போட்டியில் ஏ.சதீஷ், ஆர்.மணி, எம்.கோகுல் வெற்றி பெற்றனர். கேரள செண்டைமேளத்துடன் கண்ணபிரான் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை வெங்கடேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் ஏ.எம்.செல்வராஜ், உறியடி உற்சவத்தை துவக்கி வைத்தார். அன்னதானம், தேரோட்டம் நடந்தது. யாதவ சங்க தலைவர் சாமி, ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், விழா கமிட்டி தலைவர் சண்முகவேல், செயலாளர் முத்து, விழா கமிட்டியாளர்கள் அரிதாஸ், ஏ.எம்.தட்சிணாமூர்த்தி, ஆசிரியர் (ஓய்வு) சாத்தையா, ஊராட்சி துணைத்தலைவர் வீரையா, ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன், வி.ஏ.ஓ.(ஓய்வு) முருகேசன், மாயாகுளம் மாணவர் விடுதி காப்பாளர் சண்முகராஜ், யூ,பி.சேகர், பி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை வர்த்தகர் சண்முகராஜ், கொம்பூதி அன்பரசன், சபரிகுரு, சதீஷ்குரு, ஏர்வாடி மலைச்சாமி பங்கேற்றனர் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம், விளங்குளத்தூர், சாம்பக்குளம், பூக்குளம், பூசேரி, கடம்போடை ஆகிய கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடபட்டது. பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை, வழுக்கு மரம் ஏறுதல், விளையாட்டு போட்டிகள், உறியடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன், ஊராட்சி தலைவர்கள் செந்தில்குமார் (செல்வநாயகபுரம்), கனகவள்ளிமுத்துவேல் (விளங்குளத்தூர்), மயிலேறி வேலன் (இளஞ்செம்பூர்), திருமால் (பூசேரி), சேதுராமன் (சாம்பக்குளம்), துணை தலைவர்கள் திருக்குமரன், சம்சு லத்தீப், கோவிந்தராஜ், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.