பாவூர்சத்திரம்:அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அன்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து பஜனை பாடல் பாடப்பட்டது. பக்தர்களுக்கு தொடர்ந்து பால் அன்னம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சிவன்பாண்டி அனைத்து செய்திருந்தனர்.