மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, காலை 9:00 மணியளவில் கொடியேற்றி, பந்தல் கால் நடப்பட்டது. தினமும் காலை 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் 9ம் தேதி, கோவிலில் பதிமூன்றரை அடி உயர மகா கணபதி சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை நடக்கிறது. வரும் 10ம் தேதி பாலாபிஷேகம், திருவிளக்கு பூஜை, 11ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், 12ம் தேதி சிறப்பு பூஜை, 13ம் தேதி 1008 கொழுக்கட்டைகள் வைத்து சிறப்பு பூஜை, சமபந்தி விருந்து, மாலை வாண வேடிக்கையுடன் விநாயகர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியினர், விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.