அவிநாசி: கருவலூர் அருகே தொட்டகளம்புதூரில் உள்ள ஸ்ரீசங்கர சேவாலயத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது; சிறப்பு பஜனை, வழிபாடு, பூஜை நடந்தது. அவிநாசி ஒன்றிய சேவா பாரதி பொறுப்பாளர் ஹரிஹரன், "கோகுலத்தில் கிருஷ் ணர் என்ற தலைப்பில் பேசினார். சேவாலய குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, நடனமாடினர். அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு அளிக்கப்பட்டது. சேவாலய நிர்வாகிகள் சிந்துகுமாரி, நாராயணன் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.