பதிவு செய்த நாள்
03
செப்
2013
10:09
ஈரோடு: ஈரோடு, மேட்டூர் ரோட்டில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கணபதி தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று மாலை துவங்கியது. வரும், 14ம் தேதி வரை இக்கண்காட்சி மற்றும் விற்பனை நடக்க உள்ளது. 160 முதல், 4,000 ரூபாய் வரை, மதிப்பிலான விநாயகர் சிலைகள், 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களை தவிர, ஏனைய நாட்களில் தினமும் காலை, 10 முதல் இரவு, 8 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கும். பல வர்ணங்களில் களிமண் மற்றும் காகிதக்கூழ் விநாயகர், பூஜைக்கு உரிய வெள்ளெருக்கு வேர் விநாயகர், பவள விநாயகர், ஸ்படிக விநாயகர், மரகத விநாயகர், மார்பிள் டஸ்ட் விநாயகர், வெண் தேக்கு மர விநாயகர், சந்தன மர சிற்ப விநாயகர், பஞ்ச லோக விநாயகர், ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல்களில் செய்யப்பட்ட விநாயகர், பித்தனை விநாயகர் விளக்குகள், விநாயகர் உருவம் பதிக்கப்பட்டுள்ள, தஞ்சாவூர் ஓவிய விநாயகர், வள்ளுவர் கோட்ட தேரில் உலா வரும் விநாயகர், நவதானியங்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,000 சிலைகள் தயாராக உள்ளன. அதிகபட்சம், 3.5 அடி உயரம் கொண்ட சிலைகள் உள்ளன, என, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் விஜயகுமார் கேட்டு கொண்டார்.