பதிவு செய்த நாள்
03
செப்
2013
10:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் புதிய தேர் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய இந்து சமய அற நிலையத்துறை ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு ரூ. 25 லட்சம் உபயதாரர்கள் நிதியுதவியுடன் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்ய ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவிலில் நடந்தது. அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கேசவலு, அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, ஒன்றிய சேர்மன் ராஜசேகர், மாரியம்மன் கோவில் தர்மகாத்தா நற்குணம் முன்னிலை வகித்தனர். கோவில் ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் ஜெயக்குமார், நகர காங்., தலைவர் தனபால், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் ஜெயக்குமார், அரசு வழக்கறிஞர் சீனுவாசன், ஆர்ய வைசிய சங்க தலைவர் சுப்ரமணி, திரவுபதி அம்மன் கோவில் தர்மகர்த்தா ரகோத்தமன், கண்ணன் மகால் உரிமையாளர் ராஜேந்திரன், சந்திரன் மோட்டார்ஸ் சீனுவாசன், நகர கூட்டுறவு விவசாயிகள் சங்க தலைவர் குப்புசாமி, அ.தி.மு.க.,வினர் ஞானவேல், குபேந்திரன், புண்ணியமூர்த்தி, தண்டபாணி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.