திண்டிவனம்: திண்டிவனத்தை அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திண்டிவனம் சர்க்கார் தோப்பு வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதேபோல் நகரில் உள்ள கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.