அருணாச்சலேஸ்வரர் கோவிலில்தியான மண்டபம் அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2013 11:09
செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தியான மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.செஞ்சி பீரங்கிமேட்டில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலை புதுப்பித்து, புதிதாக வெங்கடேச பெருமாள் சன்னதி அமைத்துள்ளனர். இதன் எதிரே 1800 சதுர அடியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் கட்ட உள்ளனர்.இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆந்திர மாநிலம் அருளானந்த மடத்தைச் சேர்ந்த ஸ்ரீஅருளானந்த சுவாமிகள் முன்னிலையில் நேற்று காலை நடந்தது. தொடர்ந்து கணபதி, லட்சுமி ஹோமத்துடன் பூஜை நடந்தது.இதில் திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் அரங்க ஏழுமலை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் லோக ஜெயராமன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், திருப்பணிக்குழு செல்வம், டாக்டர் ரமேஷ்பாபு, ஆசிரியர்கள் ராமமூர்த்தி, ஜெயக்குமார், தொழிலதிபர் ரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.