அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் விநாயகர், ஐயனாரப்பன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.அவலூர்பேட்டை ஏரிக்கரையில் விநாயகர், ஐயனாரப்பன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.இதை முன்னிட்டு 15 ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு ஆணை பெறுதல், புனித நீர் வழிபாடு, நிலத்தேர் வழிபாடு, எண் வகை லட்சுமி வழிபாடும், முதல் கால வேள்வியும், இரவு 10:00 மணிக்கு மருந்து சாத்துதலும் நடக்கிறது. மறு நாள் 16 ம் தேதி காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.