கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.விழாவை முன்னிட்டு, தமிழ் வேத வார வழிபாட்டு சபையின் சார்பில் சிறப்பு பஜனை நடந்தது. சிறப்பு பஜனை வழிபாடு தலைவர் பழனியாண்டி, செயலாளர் சிவாலிங்கம் தலைமையில் ஏராளமான ஓதுவார்கள் கலந்து கொண்டனர்.விநாயகர் அகவல், விநாயகர் துதி, திருப்புகழ் ஆகிய நூல்களில் இருந்து பாடல்களைப் பாடி சுவாமியை வழிபட்டனர்.