Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பாரதியார் நினைவு நாள்! ஏர்வாடியில் தவா துவா திட்டம்: மனநலத்திற்கு பிரார்த்தனையுடன் சிகிச்சை! ஏர்வாடியில் தவா துவா திட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: மீண்டும் 48 மணி நேர முழு அடைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 செப்
2013
11:09

திருப்பதி: திருமலையில், மீண்டும், 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், திருப்பதிக்கு வரவேண்டாம் என, பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திராவில், தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, "வரும், 13ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், 15ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, திருப்பதியில் இருந்து, திருமலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது என, போராட்டம் நடத்தும் கூட்டமைப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல இயலாது.

இதுகுறித்து, போராட்டக் குழுவினர் கூறியதாவது: மத்திய அரசு எங்கள் உணர்வை புரிந்து கொள்ள மறுக்கிறது. தனித் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுநாள் வரை, தேவஸ்தானத்தின் வேண்டுகோளின்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இனி, அவர்கள் வருவது தடை செய்யப்படும். எனவே, பக்தர்கள், எங்கள் மன உணர்வை அறிந்து, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; போராட்ட நாட்களில், பக்தர்கள் யாரும் திருமலைக்கு வரவேண்டாம். தேவஸ்தானம் மீண்டும் வற்புறுத்தினாலும், எங்களுடைய முடிவு இறுதியானது. எந்த வாகனத்தையும் இயங்க விட மாட்டோம். மேலும், வரும், 13ம் தேதி இரவு, திருப்பதி நகரம் முழுவதும், மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, "மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும். இவ்வாறு, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர். இதே போன்று, சில நாட்களுக்கு முன், திருப்பதியை ஒட்டிய பகுதிகளில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, திருமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தற்போது நடக்க உள்ள போராட்டத்தின் போது, பக்தர்களின் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை, என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ரமணர் ஆஸ்ரமத்தில், ரமணரின், 145ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதில், ... மேலும்
 
temple news
திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், விபூதி நிறைந்த திருவோடு, ஒரு ருத்ராட்சம் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; உற்சவத்தை ஒட்டியுள்ள யானைகள் அணிவகுப்பு மற்றும் பட்டாசுகள் வெடிப்பதில் அரசு ஏற்படுத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar