கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கண்கொடுத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.கண்டாச்சிபுரம் கண் கொடுத்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. நேற்று மதியம் நடந்த இரண்டாம் கால யாக பூஜையில் பொம்மபுரம் ஆதினம் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டார். கோவில் நிர்வாகிகள், பூரணகும்ப மரியாதையுடன் அழைத்து வந்தனர். யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினார். பக்தர்கள் கலந்து கொண்டனர்.