விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம் நடந்தது.பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில்சுவாதி ஹோமம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 9:00 மணிக்கு சுவாதி ஹோமம் ஆரம்பமானது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாகுதியும், அதனை தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு லட்சுமி நரசிம்மருக்கு தீர்த்த திருமஞ்சனம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, ஒன்றிய சேர்மன் சர்மிளா நெடுஞ் செழியன், கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார், ஊராட்சி தலைவர் முருகன், கலந்துக் கொண்டனர்.