செஞ்சி:பெரியமூர் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெரியமூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அஷ்ட பந்தன புனராவர்த்தன ஜீர்னோத்தாரன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, தம்பதி பூஜை நடந்தது. தொடர்ந்து 8:30 மணிக்கு கடம் புறப்பாடும், 8:45 மணிக்கு விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், 8: 55 மணிக்கு கற்பகிரக மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் தர்மகர்த்தா கார்வண்ணன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். யாக சாலை பூஜைகளை ஆலம்பூண்டி தண்டபாணி அய்யர், சிவா அய்யர் ஆகியோர் செய்தனர்.