விழுப்புரம்:ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு திருமஞ் சனம் நடைபெறுகிறது. விழுப்புரம் வட்டம் ப.வில்லியனூரில் அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இன்று மதியம் 1:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக் கிறது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு புஷ்பம் மற்றும் துளசியால் அலங்கரிக்கபட்டு, சிறப்பு அலங் காரத்தில் பெருமாள், கனகவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை 5:30 மணிக்கு கருட கம் பத்தில் மகா சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.