விக்கிரவாண்டி:தும்பூர் தாங்கல் ஸ்ரீஜெய ஆஞ்சநேயர் சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கலில் நாகம்மன் கோவிலுக்கு அருகில் 32 அடி உயரத்தில் புதியதாக ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. கும்பாபிஷேகத்தை யொட்டி இன்று காலை 6:30 மணிக்கு பூர்ணாயாகம், விஸ்வரூபம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9:15 மணிக்கு கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது.