விழுப்புரம்:கொளத்தூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழுப்புரம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் விநாயகர், கங்கையம்மன் மற்றும் முருகன் கோவில்களுக்கு கும்பாபிஷேக துவக்க விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கணபதி பூஜை, கோபூஜை, லட்சுமி பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மேல் மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விநாயகர் கோவில், கங்கையம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.