பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
கும்மிடிப்பூண்டி:லட்சுமி கணபதி, தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கும்மிடிப்பூண்டி, எம்.எஸ்.ஆர்., கார்டன் குடியிருப்பு பகுதியில், லட்சுமி கணபதி, தட்சணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு, லட்சுமி கணபதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னிதி கோபுர கலசங்களின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித தீர்த்த பிரசாதம் பெற, கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதை தொடர்ந்து, லட்சுமி கணபதி மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.