பதிவு செய்த நாள்
17
செப்
2013
10:09
ஊத்துக்கோட்டை:தாராட்சி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தர்ய நாராயண பெருமாள் கோவில். இக்கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை ஒட்டி, 14ம் தேதி மாலை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தியுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. இரவு, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம், புண்ணியவாசனம், அக்னிபிரதிஷ்டை, இரண்டாம் கால யாக பூஜை, பெருமாள் கண் திறத்தல், மகா சாந்தி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாகபூஜை, மகா பூர்ணாஹீதி, கும்ப புறப்பாடு ஆகியன நடந்தன. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு, சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.