பதிவு செய்த நாள்
23
செப்
2013
04:09
*நாக அரசர்கள் தோண்டிய தீர்த்தம் இது.
*நாகங்கள் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதில் நண்டு, ஆமை, தவளை, மீன் ஆகியவை உயிர் வாழ்வதில்லை.
*இந்திரனின் மகனான ஜெயந்தன், சீதாதேவியின் தனத்தை காகம் வடிவம் கொண்டு தொட்டான். நிரந்தரமாக காகமாகி விட்டான். அதனால் ஏற்பட்ட பாவம் நீங்க இந்த தீர்த்தத்தில் காக வடிவிலேயே மூழ்கி எழுந்தான். புனிதநீர் பட்ட மாத்திரத்திலேயே சுய வடிவம் அடைந்தான். பெண் சாபம் தீர்க்கும் தீர்த்தம் இது.
*அடிக்கடி காய்ச்சல், வயிற்றைப் பிடுங்கி எறிய வேண்டும் போல் தோன்றும் கொடிய வலி ஆகியவை இத்தீர்த்தம் அருகில் நம்பிக்கையுடன் வந்தாலே போதும்! குணமாகி விடும்.
*இந்த தீர்த்தநீரை தலையில் தெளித்து, இத்தலத்தில் தரப்படும் புற்றுமண்ணை சிறிது கரைத்துக் குடித்தால் போதும். விஷக்கடி வியாதிகள் குணமாகி விடும்.
*கெட்ட நடத்தை உடையவர்கள் இங்கு வந்து அரஹர அரஹர என்று சொல்லி, இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியுடன் தீர்த்தநீரை தலையில் தெளித்தால், செய்த பாவங்கள் ஓடிவிடும்.
*தேவலோகம், பூலோகம், பாதாளலோகம் ஆகியவற்றிலுள்ள தீர்த்தங்களில் மிக உயர்ந்த இதன் தண்ணீர் உடலில் பட்டாலே, மனம் தூய்மையாகி சிவனடியாராக மாறுவார்கள்.
*அறிவில் உயர்ந்தது ஞானம், முக்திநகரங்கள் ஏழில் உயர்ந்தது மதுரை, ஏழு உலகங்களில் உயர்ந்தது பிரம்மலோகம், எழு கடல்களுள் சிறந்தது பாற்கடல். அதுபோல் தீர்த்தங்களில் உயர்ந்தது நாக சுனை. இங்கே தை, ஆடியில் வந்து தீர்த்தநீரை தலையில் தெளித்தால், உலகில் உள்ள எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பாக்கியம் கிடைக்கும்.
*சித்திரையில் இந்த தீர்த்த நீரை தலையில் தெளித்து, இது அமைந்துள்ள கோயிலை வலம் வந்தால் குபேரனைப் போல் செல்வவளம் பெறலாம்.
*தினமும் இதை தலையில் தெளிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் மறுபிறப்பில் அரசராய் பிறப்பார்கள்.
*கிரகண காலங்களில் இந்த தீர்த்தநீரை தலையில் தெளித்தால், வாழும் போது நினைத்தது நடக்கும். வாழ்வுக்குப் பின் சிவலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
*இந்த தகவல்களை நமக்கு தந்தருளியவர் புராணங்களை முனிவர்களுக்கு உரைத்த சூதமுனிவர்.
*இந்த தீர்த்தத்தைக் கொண்ட புண்ணியத்தலமே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவில்... இங்கே சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சிவவிஷ்ணு இணைந்த சங்கர நாராயணர் அருள்பாலிக்கின்றனர். இங்கு வரும் 22ல் ஆடித்தபசு விழா நடக்கிறது. வாழ்வில், ஒருமுறையாவது சங்கரன்கோவில் சென்று நிறைந்த புண்ணியத்தைப் பெற்று வாருங்கள்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 120 கி.மீ.,
போன்: 04636 222 265.