பதிவு செய்த நாள்
25
செப்
2013
11:09
கேளம்பாக்கம்:பக்தர்கள் எதிர்ப்பால், கோவில் இடிப்பது தவிர்க்கப்பட்டது.கேளம்பாக்கம் அடுத்த ரத்தின மங்கலத்தை சேர்ந்தவர் பழனி, இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதற்கு செல்லும் பாதையில், அரசு இடத்தில் ஒரு மண்டபம் இருப்பதாக கூறி, அதை அகற்ற, நீதிமன்ற உத்தரவு பெற்றார். உத்தரவு படி, அதை அகற்ற வருவாய் அதிகாரிகள் அங்கு சென்றனர்.இதை அடுத்து, பொதுமக்களும் அங்கு குவிந்தனர். அவர் நீதிமன்ற உத்தரவில் தெரிவித்த மண்டபம் அங்கு இல்லை. மாறாக, பெருமாள் கோவில் இருந்தது. பொதுமக்கள் பெருமாள் கோவிலை அகற்றக் கூடாது என, கோரினர். வருவாய் துறையினரும், நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிப்பதாக கூறி, அங்கிருந்து சென்றனர். வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மண்டபத்தை இடிப்பதற்கு வந்தோம். இங்கு, வந்த பின் தான், இது மண்டபம் அல்ல, கிராம கோவில் என்பது தெரிந்தது. கிராம மக்கள் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பணியை நிறுத்திஉள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.