மதுரை: தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்புக்குழு பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் அறிக்கை: நவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதியில், கொலு கண்காட்சி அமைப்பது பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும். அம்மன் சன்னதியின் ஒரே நுழைவுவாயில் மூலம், பொதுதரிசனம் மற்றும் கட்டணதரிசன வரிசைக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாகத்தான், கொலு பார்க்க வரும் பக்தர்கள் செல்லவேண்டியிருக்கும். இதனால் அம்மன் தரிசனம், கொலுகண்காட்சியின்போது மேலும் நெருக்கடி, காலவிரையம் ஏற்படும். சுவாமி சன்னதி பெரிய பிரகாரம் (முக்குறுனி விநாயகர் சன்னதி) பக்தர்கள் நடமாட்டமின்றி உள்ளது. ஆகம விதிப்படி அங்கு, கொலு கண்காட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.