பதிவு செய்த நாள்
26
செப்
2013
11:09
ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வரும் ஆறாம் தேதி தேர் திருவிழா துவங்குகிறது. 16ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தேர் திருவிழா, வரும், ஆறாம் தேதி மாலை கிராம சாந்தியுடன் துவங்குகிறது. ஏழாம் தேதி, காலை ஆறு மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், தீபாராதனை, கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை அன்னபட்சி வாகன வீதி உலா நடக்கிறது. வரும், 8ம் தேதி சிம்ம வாகனம், 9ம் தேதி அனுமந்த வாகனம், 10ம் தேதி கருட சேவை, 11ம் தேதி யானை வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா செல்கிறார். 12ம் தேதி திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 13ம் தேதி காலை, 8 மணிக்கு தேர் வடம் பிடித்தல், இரவு திருத்தேர் உலா வருகிறது. 14ம் தேதி மாலை குதிரை வாகனம், 15ம் தேதி சேஷ வாகனத்தில் ஸ்வாமி உலா வருகிறார். 16ம் தேதி காலை அபிஷேகம், மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. மாலை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர்.