திண்டிவனம்:திண்டிவனம் பகுதியில் பெய்த மழையால் மயிலம் முருகர் கோவில் மலையை சுற்றியுள்ள மரங்கள் செழித்து வளர்ந்து பசுமையாக உள்ளன. திண்டிவனம் பகுதியில் பெய்த கன மழையால் வறட்சியாக இருந்த மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்து பச்சபசேல் என அனைத்து இடங்களும் காட்சியளித்து வருகின்றது. மயிலம் மலையில் உள்ள முருகர் கோவில் ராஜ கோபுரம் கட்டும் பணிகள் முடிந்து வண்ணங்கள் பூசி ரம்யமாக காட்சியளிக்கின்றது. சில மாதங்களாக பெய்த கன மழையால் மலையை சுற்றியுள்ள மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. இதனால் சென்னை -திருச்சி நான்கு வழிச்சாலை வழியாக பயணம் செல்வோர் திண்டிவனம் அடுத்த தென்பசியார் பகுதியில் செல்லும் போது பார்த்தாலே மயிலம் முருகன் கோவில் ராஜகோபுரத்தை தரிசித்துச் செல்லலாம்.