பதிவு செய்த நாள்
26
செப்
2013
11:09
கந்தர்வக்கோட்டை: கந்தர்வக்கோட்டையில், முத்துமாரியம்மன் கோவில் விடையாற்றி திருவிழா முன்னிட்டு, முக்கிய வீதிகளில் அம்மன் வீதியுலா வந்து, அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். புதுகை மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவிலில் விடையாற்றி திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி முதல் ஞாயிறு நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டும் கணபதி பூஜையுடன் கடந்த 23ம் தேதி விழா துவங்கியது. இதில், அம்மனுக்கு காலை 8 மணிக்கு பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் என, 11 அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதையடுத்து, 8 மணிக்கு தாரை தப்பட்டை முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், ராஜ வீதிகளின் வழியாக வீதியுலா நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். இரவு 9.30 மணிக்கு இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வக்கோட்டை பகுதி மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.