கன்னிவாடி : சஷ்டியை முன்னிட்டு, தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு, பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.