புதுச்சேரி: நாணமேடு கிராமத்தில் சொர்ணா கர்ஷன பைரவர் கோவிலில் "மத்யாஷ்டமி மகா யாகம் இன்று நடக்கிறது. புதுச்சேரி-கடலூர் சாலையில், இடையார்பாளையம் பஸ் நிறுத்தம், நாணமேடு கிராமத்தில் ஸ்ரீ சொர்ணா கர்ஷன பைரவர் கோவில் உள்ளது.இக்கோவிலில், "மத்யாஷ்டமி மகா யாகம் இன்று (27ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை விசேஷ ஹோமம், அபிஷேக அலங்கார பூஜையை சிவஸ்ரீ குருஜி, முத்து குருக்கள் ஆகியோர் செய்கின்றனர். மத்யாஷ்டமியில் ஸ்ரீ சொர்ணா கர்ஷன பைரவரை தரிசிப்பவர்கள், லட்சுமிகடாட்சம், சவுபாக்கியம், பித்ரு தோஷ நிவர்த்தி, நவக்கிரக தோஷ நிவர்த்தி பெறுவார்கள் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.