காரைக்குடி: காரைக்குடி செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலய விழா,கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கில்ராஜ் கொடியேற்றினார். தேர்பவனி அக்.5ல் நடக்கிறது. விழா நாட்களில் மாலை 5.30 மணிக்கு, செபமாலை,திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அருட்பணி.அந்தோணிசாமி மற்றும் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.