பதிவு செய்த நாள்
30
செப்
2013
11:09
ஈரோடு: ஈரோடு, கொங்கலம்மன் கோவிலில் அக்டோபர், 4ம் தேதி, காலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனத்துடன் நவராத்திரி விழா துவங்குகிறது. 6ம் தேதி காலை, 7 மணிக்கு ஏகதின தமிழ் லட்சார்ச்சனை நடக்கிறது. அக்டோபர், 14ம் தேதி காலை, 7 மணிக்கு சூக்தமகாயாகம் நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு, துர்கா, லட்சுமி, சரஸ்வதிக்கு தினமும், பாராயணம் நடக்கிறது. ஏகதின தமிழ் லட்சார்ச்சனையில், தமிழ் படிக்க தெரிந்த பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனவும், காலை, 6 மணிக்குள் லட்சார்ச்சனை முடியும் வரை பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேறுதல் கூடாது எனவும், லட்சார்ச்சனைக்கு தேவையான துளசி, வில்வம் போன்ற இலைகளை பக்தர்கள் கொடுத்து, கொங்கலம்மனின் அருள் பெறுமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி ஆணையரும், தக்காருமான சபர்மதி உத்தரவுப்படி, செயல் அலுவலர் சுகுமார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.